நிகழ்வு-செய்தி

"அமான் - 2025" என்ற பலதரப்பு பயிற்சியில் கலந்து கொண்ட விஜயபாகு கப்பலானது இலங்கையை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்திருந்த (AMAN-2025) பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு கப்பல், குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (2025 பெப்ரவரி 17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அங்கு கடற்படை மரபுப்படி விஜயபாகு கப்பலை வரவேற்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

17 Feb 2025

இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையிள் கடற்படை தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் மற்றும் இலங்கையிலும் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் கர்னல் Avihay Zafrany இன்று (2025 பெப்ரவரி 17) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகோடாவைச் சந்தித்தார்.

17 Feb 2025

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இலங்கையை விட்டுப் புறப்பட்டது

2025 பெப்ரவரி 16 ஆம் திகதி நட்புரீதியான விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல், விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று (2025 பெப்ரவரி 17) இலங்கையில் இருந்து புறப்பட்டதுடன், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.

17 Feb 2025

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் அனுராதபுரம் பரசங்கஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சிரச GAMMADDA சமூகப்பணி திட்டத்தின் அனுசரணையில், அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம மாகாண பிராந்திய செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பரசங்கஸ்வெவ நிக்ரோதாராம விகாரையில் நிறுவப்பட்ட 1080வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2025 பெப்ரவரி 16) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

16 Feb 2025

"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்தின் கீழ் கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி மற்றும் இன்று (2025 பெப்ரவரி 16) மேற்கு, தென் கிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு கடற்படை முழுமையான பங்களிப்பை வழங்கியது.

16 Feb 2025

இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

16 Feb 2025

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய இருதரப்பின் ஏற்பாடுகளுடன் நீர்வரைவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றனர்.

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு, இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கும் (SLNHO) ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகத்திற்கும் (UKHO) இடையிலான இருதரப்பு ஒப்பந்த்திற்கு கையொப்பமிடல், இன்று (2025 பெப்ரவரி 14) கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

14 Feb 2025

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், ரியர் அட்மிரல் Angus Essenhigh, இன்று (2025 பெப்ரவரி 14) அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

14 Feb 2025

புதுப்பிக்கப்பட்ட 84S வகை அரை தானியங்கி துப்பாக்கிகள் (34) முப்பத்து நான்கினை கடற்படையினரால், துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கழகங்களிற்கு வழங்கப்பட்டது

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், 34 பணிநீக்கம் செய்யப்பட்ட 84S அரை தானியங்கி துப்பாக்கிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப இலங்கை கடற்படையால் பழுதுபார்க்கப்பட்டு, 2025 பெப்ரவரி 08 அன்று பனலுவ துப்பாக்கிச் சுடும் மைதானத்தில் துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கழகங்களிடையே விநியோகிக்கப்பட்டன.

14 Feb 2025

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா பதவியேற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா இன்று (2025 பெப்ரவரி 13) வெலிசர, தன்னார்வ கடற்படை தலைமையகத்தில், இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.

13 Feb 2025