நிகழ்வு-செய்தி

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையைப் படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன மூன்றாவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனை படைக்கும் நடைபயணத்தை 2024 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன மூன்றாம் நாளை 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

15 Jan 2024

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க பதவியேற்பு

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க இன்று (2024 ஜனவரி 12) வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

12 Jan 2024

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்திய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான எகிப்திய தூதுவராக பணியாற்றும் கெளரவ Maged Mosleh அவர்கள் இன்று (2024 ஜனவரி 10) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

10 Jan 2024

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் விசேட சமய நிகழ்ச்சிகள் மேற்னொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் விசேட சமய நிகழ்வொன்று 2023 டிசம்பர் 29 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

30 Dec 2023

29 நேரடி நுழைவு அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது

இலங்கை தொண்டர் கடற்படைக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 29 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2023 டிசம்பர் 29) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் அதிகாரி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

29 Dec 2023

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கௌரவ Michael Appleton அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று (2023 டிசம்பர் 29) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

29 Dec 2023

கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் சமய மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர், இதன் கீழ் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இரத்ததான நிகழ்ச்சிகள் 2023 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்றது.

29 Dec 2023

இலங்கை கடற்படை சஞ்சிகையின் பன்னிரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது

இலங்கை கடற்படை ஆராய்ச்சிப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற இலங்கை கடற்படை சஞ்சிகையின் (Sri Lanka Navy Journal) பன்னிரண்டாவது இதழ் கடற்படை ஆய்வுப் பிரிவின் தலைவர் கப்டன் பிரசாத் ஜயசிங்கவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் 2023 டிசம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

28 Dec 2023

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI DIPONEGORO- 365’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI DIPONEGORO- 365’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 டிசம்பர் 21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

21 Dec 2023

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கௌரவ Major General (R) Umar Farooq Burki அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று (2023 டிசம்பர் 21) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

21 Dec 2023