நிகழ்வு-செய்தி
2026 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப்பில் கடற்படை ஏராளமான வெற்றிகளைப் பெற்றது
இலங்கை முய்தாய் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 2026 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப், 2026 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் விதிவிலக்கான சண்டைத் திறன் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை கடற்படை அணி 02 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
27 Jan 2026
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையின் இரத்த தான திட்டம்
கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 23 அன்று முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையினரால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
26 Jan 2026
ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘AL SEEB’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 ஜனவரி 22 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB', 2026 ஜனவரி 24 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டது, மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.
26 Jan 2026
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவை விட்டு புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 ஜனவரி 22 ஆம் திகதி தீவை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை போர்க்கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA - 367’, 2026 ஜனவரி 23 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.
26 Jan 2026
போபுருஎல்ல நீர்த்தேக்கத்தின் செயலற்ற மதகின் செயல்பாட்டை மீட்டெடுக்க கடற்படை சுழியோடிகளின் உதவி
நுவரெலியாவில் உள்ள போபுருஎல்ல நீர்த்தேக்கத்தின் செயலற்ற மதகை செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படை 2026 ஜனவரி 19 ஆம் திகதி சுழியோடியின் உதவியை வழங்கியது.
23 Jan 2026
இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA - 367’ தீவை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படையின் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' என்ற போர்க்கப்பல் இன்று (2026 ஜனவரி 22,) விநியோக மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றது.
22 Jan 2026
ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB' கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB' இன்று (2026 ஜனவரி 22,) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
22 Jan 2026
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
21 Jan 2026
நேபாளத்தின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்
இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய பிரிகேடியர் ஜெனரல் Purna Bahadur Khatri தலைமையிலான அதிகாரிகள் குழு 2026 ஜனவரி 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது.
20 Jan 2026
ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு
கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான 2026 ஜனவரி 15 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.
19 Jan 2026


