12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் அணி வென்றது

2023 ஜூன் மாதம் 23 ஆம் திகதி ஏகல, இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற 2022/2023 12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் ஹொக்கி அணி வென்றது.

அதன்படி இலங்கை விமானப்படை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடிய கடற்படை மகளிர் அணி 4/3 என்ற புள்ளி கணக்கில் மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றதுடன் இறுதிப் போட்டியில் பெண் கடற்படை வீராங்கனை பி.என்.எம்.ஜெயநெத்தி, பெண் கடற்படை வீராங்கனை ஜி.ஜி.ஜி.தமயந்தி, பெண் கடற்படை வீராங்கனை கே.எல்.ஏ.எஸ்.சீ குமாரி மற்றும் பெண் கடற்படை வீராங்கனை கே.வி. களுஆராச்சி தலா 1 கோல் அடித்து கடற்படை அணியின் வெற்றிக்கு பங்களித்தனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் கடற்படை மகளிர் ஹொக்கி அணி தொடர்ந்து நான்காவது முறையாக பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

மேலும், இறுதிப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக, பெண் கடற்படை வீராங்கனை கே.எல்.ஏ.எஸ்.சீ குமாரி விருதுகளை வென்றார், இந்நிகழ்வில் முப்படைகளின் சிரெஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளை கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.