12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரை மரத்தன் போட்டியில் கடற்படை இரண்டாம் இடத்தை வென்றது.

கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை தள மைதானத்தில் 2023 ஜூன் 24 ஆம் திகதி நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் தடகள போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரை மாரத்தன் போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது.

உஸ்வெடகெய்யாவ மலிமா கிளப் ஹவுஸ் அருகில் போட்டி ஆரம்பித்து சுமார் 10 கிலோமீற்றர் 500 மீற்றர் தூரம் சென்று அதே இடத்தில் போட்டி நிறைவடைந்தது. அங்கு கடற்படை வீரர் டபிள்யூ.எம்.எஸ்.குமார, கடற்படை வீரர் ஆர்.டி.என்.எஸ்.கருணாரத்ன, கடற்படை வீரர் ஆர்.ஏ.பி.டி.அருணசிறி, கடற்படை வீரர் டி.பி.கே.வீரசிங்க மற்றும் டி.பி.ஜி.டி.மதுசங்க ஆகியோர் ஆண்களுக்கான அரைமரதன் பிரிவில் பதக்கங்களை வென்றனர்.

மேலும், பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் கடற்படை வீராங்கனை எம்.எஸ்.பி.எம்.பெரேரா, கடற்படை வீராங்கனை எம்.ஏ.என்.கே.பெர்னாண்டோ கடற்படை வீராங்கனை வி.கிருஷாந்தனி, கடற்படை வீராங்கனை ஏ.அனுஷா, கடற்படை வீராங்கனை டி.சி.எம்.டி சில்வா ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.

மேலும் இந்நிகழ்வில் கடற்படை தடகள விளையாட்டுப் பிரிவின் தலைவர் கொமடோர் சந்தன போபாகொட உட்பட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.