பாய்மரப்போட்டிகளில் இலங்கை கடற்படையினர் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்

2023 ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பொல்கொட நீர்த்தேக்க வளாகத்தில் நடைபெற்ற ‘CMYC Team Racing GP 14’ மற்றும் ‘QEQ Sailing Challenge Trophy Open Race – 2023’ பாய்மரப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் இலங்கை கடற்படை பாய்மரக் குழுக்கள் குறித்த போட்டித்தொடரில் பல வெற்றிகளைப் பெற்றன.

ஒற்றையர் மற்றும் அணிகள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் நாடளாவிய ரீதியில் பல பிரபல பாய்மரப் படகு அணிகள் கலந்துகொண்டன. அதன்படி, 2023 ஆகஸ்ட் 26 ஆம் திகதி நடைபெற்ற ‘CMYC Team Racing GP 14’ போட்டிக்காக RCYC அணி, Future Fiber அணி, CMYC அணி மற்றும் YASAL Future Fiber அணி ஆகியவை கலந்து கொண்டதுடன் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 'A' மற்றும் 'B' ஆக இரண்டு (02) அணிகள் கலந்து கொண்டன. ‘CMYC Team Racing GP 14’ போட்டியில் சிறப்பாக விளையாடிய கடற்படை 'B' அணி முதலாம் இடத்தையும், கடற்படை 'A' அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. போட்டியின் சிறந்த ஜோடியாக கடற்படை வீர்ர் ஏ.எம்.ஜே அத்தநாயக்க மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே டி சொய்சா ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர்.

மேலும், 2023 ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெற்ற 'QEQ Sailing Challenge Trophy Open Race - 2023' போட்டியில் கடற்படை வீரர் பீ.டீ.டீ.எஸ் ராஜபக்‌ஷ முதலிடத்தையும், கடற்படை வீரர் டப்.ஏ.எஸ் வீரதுங்க மற்றும் கடற்படை வீரர் ஜீ.பீ.பீ கருணாரத்ன அதன் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.