இலங்கை இடைநிலை குத்துச்சண்டை போட்டித்தொடர் 2023 யின் வெற்றி கடற்படைக்கு

இலங்கை கடற்படை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த இடைநிலை குத்துச்சண்டை போட்டித்தொடர் 2023 யின் 06 தங்கப் பதக்கங்கள், 08 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இலங்கை கடற்படை குத்துச்சண்டை அணி போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றது.

2023 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் (Royal MAS Boxing Arena) நடைபெற்ற இந்த போட்டியில் தீவின் பல பிரபலமான குத்துச்சண்டை கழகங்கள் பங்குபற்றியதுடன், 25 விளையாட்டு வீரர்கள் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

அங்கு முறையே 54, 57, 75 மற்றும் 92 கிலோ எடைப் பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்து கொண்ட கடற்படை வீர்ர் ஏ.எஸ்.பிரியங்கர, கடற்படை வீர்ர் ஈ.டப்.ஏ.சந்தருவன், கடற்படை வீர்ர் ஆர்.ஜி.யு.எஸ்.ரூபஸ்ஸர மற்றும் கடற்படை வீர்ர் பி.ஏ.ஆர்.எல்.வினோத் ஆகியோர் 60 மற்றும் 81 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட முறையே கடற்படை வீராங்கனை எல்ஆர்எஸ் சசங்கி மற்றும் கடற்படை வீராங்கனை எச்எம்எச்பி ஜெயகொடி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

மேலும், முறையே 48, 51, 67, 71 மற்றும் 86 கிலோ எடைப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் டபிள்யூ.பி. அரவிந்த, கடற்படை வீரர் எஸ்.ஐ. ரன்மல், கடற்படை வீரர் ஆர்.எம்.ஜே. சமீர, கடற்படை வீரர் டப்.டீ.கே. ஜயசிங்க மற்றும் கடற்படை வீரர் ஏ.டப்.ஏ. மதுஷான் ஆகிய விழையாட்டு வீரர்கள் மற்றும் 50, 52 மற்றும் 54 கிலோ கிராம் எடைப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை கே.எம்.எம்.ஜே.கோனார, கடற்படை வீராங்கனை ஆர்.எம்.எஸ்.எஸ். ரத்நாயக்க மற்றும் கடற்படை வீராங்கனை ஆர்.எம்.ஒய்.டி.பி. மெனிகே ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், 48, 51, 54, 60 மற்றும் 80 கிலோ எடைப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஜி.கே.ஜி.டபிள்யூ.குமார, கடற்படை வீரர் எச்.மானவடுகே, கடற்படை வீரர் கே.எம்.ஜி.ஜி.சதுரங்க, கடற்படை வீரர் பி.எஸ்.குமார மற்றும் கடற்படை வீரர் எம்.எம்.டி.குமார ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

மேலும், 50 கிலோ எடைப்பிரிவின் கீழ் விளையாடிய கடற்படை விராங்கனை கே.எம்.எம்.ஜே.கோனார சிறந்த தோல்வியாளருக்கான கோப்பையை வென்றார், மேலும் இலங்கை கடற்படை குத்துச்சண்டை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2023 இன் சாம்பியன்ஷிப்பை வென்றது.