ரஷ்யாவில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு படைகள் ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தை இலங்கை பாதுகாப்பு படைகள் ரக்பி அணி பெற்றுக்கொண்டது

ரஷ்யாவின் மொஸ்கோவில் 2023 ஆகஸ்ட் 22 முதல் 28 வரை நடைபெற்ற முதல் பாதுகாப்பு படைகள் ஆண் ஏழு பேர் கொண்ட போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு படை ரக்பி அணி மூன்றாவது இடத்தை வென்றது.

இதன்படி, 05 நாடுகளின் பாதுகாப்புப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 05 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன், இலங்கை பாதுகாப்புப் படை ரக்பி அணிக்காக நான்கு (04) கடற்படை ரக்பி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏ.எம்.டீ.எம் சேனவிரத்ன, போட்டி முழுவதும் 03 முயற்சிகளை அடித்து போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.