12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023 ஆண்கள் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

2023 செப்டம்பர் 05 ஆம் திகதி கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி 2023 இன் ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி அனைவரும் ஆட்டமிழந்து 86 ஓட்டங்களைப் பெற்றனர். குறித்த போட்டியில் வெற்றி பெற்ற இராணுவ அணி 12ஆவது பாதுகாப்புச் சேவைகள் கிரிக்கட் சம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியதுடன் இலங்கை கடற்படை இரண்டாம் இடத்தையும் வென்றது.

மேலும், முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளை கொண்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.