2024 டக்கா மரதன் போட்டித்தொடரில் கடற்படை வீரர் ஆர்.டி.என்.எஸ் கருணாரத்ன 7வது இடத்தை வென்றார்.

2024 ஜனவரி 26 ஆம் திகதி பங்களாதேஷில் நடைபெற்ற 'டக்கா மரதன் போட்டித்தொடர் - 2024' இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஆர்டிஎன்எஸ் கருணாரத்ன ஏழாவது (07) இடத்தை வென்றார்.

இந்த போட்டித்தொடரில் இருபது (20) நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் கலந்துகொண்டனர். அங்கு இலங்கை கடற்படை வீரர் ஆர்.டி.என்.எஸ் கருணாரத்ன 42 கி.மீ 195 மீற்றர் தூரத்தை 02 மணித்தியாலம் 26 நிமிடம் 54 வினாடிகளில் பூர்த்தி செய்து ஏழாவது (07) இடத்தைப் பெற்றுக் கொண்டார், அதுவே அவரது சிறந்த நேரமாகவும் குறிக்கப்பட்டது.