'விஜயபாகு மோட்டார் கிராஸ் - 2024' போட்டித்தொடரில் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது

இலங்கை மோட்டார் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தின் விஜயபாகு ரெஜிமென்ட் இணைந்து ஏற்பாடு செய்த 'விஜயபாஹு மோட்டார் கிராஸ் - 2024' போட்டித்தொடர் 2024 மார்ச் 31 ஆம் திகதி குருநாகல், போயகனே இராணுவ ஓடுபாதையில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகள் பெற்றனர்.

பதினான்கு (14) மோட்டார் சைக்கிள் போட்டிகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) வீரர்கள் கலந்துகொண்டனர். அங்கு, Standard 125cc போட்டியில் நான்காம் இடத்தை கடற்படை வீரர் டிஎம்எஸ்எஸ் குமாரவும், Racing 125cc Open போட்டியில் முதலிடத்தை கடற்படை வீரர் இஏபிஎன் எதிரிசிங்கவும், ஐந்தாம் இடத்தை கடற்படை வீரர் டிஎம்எஸ்எஸ் குமாரவும் பெற்றுள்ளனர். Racing 125 cc Defense Service போட்டியில் கடற்படை வீரர் ஈ.ஏ.பி.என் எதிரிசிங்க மூன்றாவது இடத்தையும், டி.எம்.எஸ்.எஸ் குமார ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும், Standard 250 cc போட்டியில் மூன்றாம் இடத்தை கடற்படை வீரர் ஈஏபீஎன் எதிரிசிங்கவும், Super Mortard Race-01 போட்டியில் நான்காம் இடத்தை கடற்படை வீரர் எம்வீடப்பீ கருணாரத்னவும், Super Mortard Race- 02 போட்டியில் ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், அதிதீவிர பந்தய மோட்டார் சைக்கிள் அணியின் செயலாளர் கமாண்டர் சாமர மீபாவல உள்ளிட்ட அதிதீவிர பந்தய மோட்டார் சைக்கிள் வீரர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.