Drug Bust News-ta

53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக நபர்களுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. பல நாள் மீன்பிடி படகு இன்று (2025 அக்டோபர் 17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், படகில் இரண்டு உறைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் 53 கிலோ 134 கிராம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இவ் போதைப்பொருள் தொகை, சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

17 Oct 2025

தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

15 Oct 2025

மன்னார், நருவிலிக்குளம் பகுதியில் ரூ.203 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் சிறப்பு காவல் பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 02, அன்றும் இன்றும் (2025 செப்டம்பர் 03,) நடத்திய சிறப்புத் தேடுதல் போது, ரூ. 203 மில்லியனுக்கும் அதிகமான மொத்த தெரு மதிப்புள்ள தொள்ளாயிரத்து ஆறு (906) கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

03 Sep 2025

யாழ்ப்பாணத்தின் சம்பிலித்துறை கடற்கரைப் பகுதியில் ரூ.21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாதகல், சம்பிலித்துறை கடலோரப் பகுதியில் 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் தொண்ணூற்று ஆறு (96) கிலோகிராம் மற்றும் ஐநூறு (500) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தொரு (21) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

02 Sep 2025

27மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 121 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னார், வான்கலை பகுதி மற்றும் யாழ்ப்பாணம்,நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு (02) டிங்கி படகுகள், ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும் நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

30 Aug 2025

பேசாலையில் ரூ.24 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலைமன்னார், குடியிருப்பு மற்றும் பேசாலைக்கு இடைப்பட்ட கரையோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படையினரால் நூற்றுப் பத்து (110) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தி நான்கு (24) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

13 Aug 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் கற்பிட்டியில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு கற்பிட்டி திகாலி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, முந்நூற்று எழுபத்தொன்பது (379) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று எண்பத்தோராயிரத்து இருநூறு (281200) மருந்து மாத்திரைகள் மற்றும் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்றொன்று (1291) மருந்து ஊசிகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு (01) சந்தேக நபருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

13 Aug 2025

அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

07 Aug 2025

சிலாவத்துறை அரிப்பு பகுதியில் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள நூற்று ஒரு (101) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.

31 Jul 2025

வட கடலில் 15 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரள கங்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை 2025 ஜூலை 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பதினைந்து மில்லியன் ரூபாய்க்கு மேல் மொத்த தெரு மதிப்புள்ள சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் எழுநூறு (700) கிராம் கேரள கங்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

13 Jul 2025