இலங்கை கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (2025 செப்டம்பர் 16 முதல் 25 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்ததற்காகவும், இரவில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காகவும், உரிமம் இல்லாமல் மீன்பிடித்ததற்காகவும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததற்காகவும் 36 நபர்கள், பதின்மூன்று (13) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) படகுகளுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.