Other Contraband-ta

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 750 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் புத்தளம், சேரக்குளிய, கல்பிட்டி மற்றும் கங்கேவாடிய கடலோரப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று ஐம்பது (750) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

20 Jul 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜூலை 19 ஆம் திகதி நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்தெட்டு (2828) கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.

20 Jul 2025