Other Contraband-ta

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பீடி இலைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் 2025 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து இருநூற்று பதினொரு (1211) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கல்பிட்டியவில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

2025 நவம்பர் 06 ஆம் திகதி கல்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் ஒரு டிங்கி (01) மற்றும் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.

10 Nov 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 793 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன்திவு தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

31 Oct 2025

கல்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 956 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 27 ஆம் திகதி காலை, கல்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு (956) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

28 Oct 2025

கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.

22 Oct 2025

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகையும் கைப்பற்றினர்.

08 Oct 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 07 ஆம் திகதி கல்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

08 Oct 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்தப்பட்டன.

06 Oct 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 03 ஆம் திகதி கல்பிட்டி துடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

04 Oct 2025

கற்பிட்டி களப்பில், சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் 4 கிலோ 454 கிராம் தங்கத்தை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் 2025 அக்டோபர் 01 காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கைப்பற்றப்பட்டனர்.

01 Oct 2025