Other Contraband-ta
கொழும்பு வேல்ல வீதியில் 1618 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைப்பற்றப்பட்டார்
கொழும்பு வேல்ல வீதிப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு (1618) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
01 Oct 2025
யாழ்ப்பாணத்தில் 857 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த எண்ணூற்று ஐம்பத்தேழு (857) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.
30 Sep 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.
26 Sep 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1197 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்களுடன் சிலாவத்துறையில் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்
இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டரவேலி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.
21 Sep 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1680 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்களை நீர்க்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
16 Sep 2025
முகத்துவாரத்தில் 180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் சிக்கினார்
இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் இருந்த நூற்று எண்பது (180) வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒரு (01) சந்தேக நபரைக் கைது செய்தனர்.
14 Sep 2025
மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 91 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
மன்னார் பேசாலை சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொண்ணூற்றொன்று (91) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகுடன் கைப்பற்றினர்.
11 Sep 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 833 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 08 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட எண்ணூற்று முப்பத்து மூன்று (833) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.
21 Aug 2025
புத்தளம் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனங்களுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இரவு புத்தளம் எத்தாலை பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனங்களை கொண்டு சென்ற ஒரு லொரியுடன் (01) சந்தேக நபர் (01) ஒருவரையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
20 Aug 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1180 கிலோகிராம் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், இரண்டு (02)
13 Aug 2025


