கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் 2025 ஜூலை 06 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டனர்.