யாழ்ப்பாணத்தின் நெடுந் தீவிலிருந்து குறிகட்டுவான் ஜெட்டிக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிக்கொண்டு சென்ற "PERL LINK" என்ற பயணிகள் படகு 2025 ஜூலை 12 ஆம் திகதி கவிழ்ந்ததுடன், பன்னிரண்டு (12) சுற்றுலாப் பயணிகளையும் இரண்டு (02) பணியாளர்களையும் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை தேவையான உதவிகளை வழங்கியது.