அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதில் உள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவிமாரு, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கை கடற்கரையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல்கள் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு (04) மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்ட பின், அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மீனவர்கள் வணிகக் கப்பலான MV Graceful Star அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக கடற்படை இலங்கை கடற்படை கப்பலான சிதுரலவை அனுப்பியது.