நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 29,) சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரெண்டு (12) பேருடன் நான்கு (04) டிங்கி படகுகள், ஆயிரத்து அறுநூற்று எழுபது கடல் அட்டைகள் (1670) மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

29 Nov 2023

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி பகுதியில் கைது

யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி வத்திராயன் பகுதியில் 2023 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்படிருந்த முப்பத்து நான்கு (34) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

28 Nov 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, இப்பன்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 2023 நவம்பர் 22 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

23 Nov 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 09 பேர் கடற்படையினரால் கைது

மன்னார், அரிப்பு கடற்பரப்பில் 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது பேர் (09), மீன்பிடி உபகரணங்கள், ஆயிரத்து முன்னூற்று நான்கு கடல் அட்டைகள் (1384) மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

21 Nov 2023

40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் 2023 நவம்பர் 20 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடலோரப் பகுதியில் ஒரு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்று ஒறு கிலோ கிராமுக்கு அதிகமான (101) எடையுள்ள (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

21 Nov 2023

27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அனலத்தீவில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் அனலத்தீவில் 2023 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அறுபத்தொன்பது (69) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

11 Nov 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 09,) கல்பிட்டி இரமதீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த 570,000 Pregabalin போதை மாத்திரைகள் அடங்கிய டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Nov 2023

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜா எல பகுதி மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டது

அண்மையில் பெய்த கடும் மழையினால் ‘ஜா-எல கால்வாய்’ நிரம்பி ஏற்பட்ட வெள்ள நிலைமையின் பின்னர், 2023 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் ஜா-எலவில் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன்படி, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முன்வந்தன.

09 Nov 2023

54 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் எழுவத்தீவிற்கு அப்பால் கடற்பகுதியில் 2023 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நூற்று முப்பத்தேழு (137) கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Nov 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 நவம்பர் 03 ஆம் திகதி மாலை மன்னார், ஒழுதுடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள், டிங்கி படகொன்று (01), முச்சக்கர வண்டியொன்று (01) மற்றும் மோட்டார் சைக்கிளொன்று (01) கைது செய்யப்பட்டுள்ளது.

04 Nov 2023