நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பெரிய அரிச்சால் தீவுகளுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் 2023 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதிவூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் ஐநூற்று முப்பது (530) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட (ஈரமான எடை) (01) டிங்கி படகொன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

15 Jul 2023