நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி வன்னிமுந்தலம குளத்தில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி கல்பிட்டி, வன்னிமுந்தலம குளம் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த குளம் பகுதியாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட அறுநூற்று முப்பத்தொன்பது (639) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகு ஒன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.
14 Sep 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், ககரதீவு மற்றும் கோவிலன் கலங்கரை விளக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினேழு (17) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Sep 2023


