இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 டிசம்பர் 12 முதல் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பலகாவல பகுதிக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது அப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கடற்படை நிவாரண குழுக்களால் வழங்கப்படுகின்றன.