நடவடிக்கை செய்தி

1200 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயிரத்து இருநூறு (1200) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

08 Feb 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டது.

08 Feb 2024