கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பிலும், பருத்தித்துறைக்கு அண்மித்த இலங்கை கடற்பரப்பிலும் 2024 மார்ச் 09 ஆம் திகதி இரவிலும், இன்று (2024 மார்ச் 10) காலையிலும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்களுடன் மூன்று (03) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டது.