சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 52 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை, கோபால்புரம் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், பவுல்பொயின்ட கடற்பகுதியில், புல்முடே யான் ஓய முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடற்பகுதியில், லங்காபடுன கடற்பகுதியில் மற்றும் முல்லைதீவு அலம்பில் கடற்பரப்பில் 2024 ஜூன் 04 ஆம் திகதி முதல் இன்று (2024 ஜூன் 06) வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐம்பத்திரண்டு (52) நபர்களுடன், பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 ஜூன் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை கோபால்புரம் கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் ஒரு டிங்கி படகைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் திருகோணமலை, பவுல் பொயின்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பரகும்பா நிருவன கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் நான்கு (04) படகுகள், புல்முடே ரன்வேலி ஓயா முகத்துவாரத்தை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) பேர், ஒரு டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான லங்காபடுன நிருவனத்தை அன்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பதினாறு (16) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இன்று (2024 ஜூன் 06,) முல்லைத்தீவு லாம்பில் கடற்பரப்பில் கிழக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கோத்தபாய நிருவனத்தினால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) டிங்கி படகுகள் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் ஐம்பத்திரண்டு (52) பேர், பத்து (10) டிங்கிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நிலாவெளி, கிண்ணியா, மூதூர், பொடுவகட்டு மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 மற்றும் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர், மூதூர் கடற்றொழில் பரிசோதகர், குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர் மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.