கடற்படையினரால் இன்று (2024 ஜூலை 10,) புத்தளம் பள்ளியவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1373 கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.