செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 04 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் திருகோணமலை அரிசிமலை கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் (01), ஒரு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றினர்.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2024 ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, பகலில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிறுவனத்தின் கடற்படையினர் சிறிய படகுகள் மூலம் திருகோணமலை, ஆசிரிமலை கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நான்கு பேர் (04) ஒரு டிங்கி (01) மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்ட குச்சவேலி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நான்கு சந்தேகநபர்கள் (04), ஒரு டிங்கி படகு (01) மற்றும் மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.




