சுமார் 442,680 போதை மாத்திரைகள் கல்பிட்டியில் கைது
இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து 2024 நவம்பர் 14 ஆம் திகதி கல்பிட்டி முசல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சத்து நாட்பத்தி இரண்டாயிரத்து அறுநூற்று எண்பது (442,680) போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து, 2024 நவம்பர் 14 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சிறிய காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சத்து நாட்பத்தி இரண்டாயிரத்து அறுநூற்று எண்பது (442,680) போதை மாத்திரைகளுடன் பதினெட்டு (18) பைகள் கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.