மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 நவம்பர் 24 ஆம் திகதி கடற்படையின் மூன்று (03) நிவாரண குழுக்களை மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, அதிக மழை காரணமாக நில்வலா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதால், வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மூன்று (03) கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் உயிர்காக்கும் உபகரணங்களுடன் அணுப்பப்பட்டன.

குறித்த நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2024நவம்பர் 25) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை குழந்தைகள் குழுவிற்கும், உள்ளூர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை கடற்படை படகுகள் மூலம் வழங்கின.

மேலும், இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையின் நூற்று முப்பத்து நான்கு (134) கூடுதல் நிவாரணக் குழுக்கள் தேவைக்கேற்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.