சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கம் கற்பிட்டி, பத்தலன்கடுவயில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஜனவரி 04) கற்பிட்டி பத்தலன்கடுவ தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், கடற்படையினரால் அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு முயற்சித்த (11) கிலோ (300) கிராம் தங்கம், ஒரு (01) டிங்கி படகுடன் 03 சந்தேகநபர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் படி, இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் சிறப்பு படகுகள் படையணி குழுவொன்று கற்பிட்டி, பத்தலன்கடுவை கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று (2025 ஜனவரி 04) சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த கப்பல் பரிசோதிக்கப்பட்டது. அங்கு, மூன்று (03) சந்தேக நபர்கள், (01) டிங்கி படகும் குறித்த டிங்கியில் மறைத்து வைக்கப்பட்டு வெளியே எடுக்க முயன்ற பதினொரு (11) கிலோ முந்நூறு (300) கிராம் தங்கத்துடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் பதினொரு கிலோ (11) முந்நூறு (300) கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் (01) டிங்கி படகு என்பவையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.