சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 864 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் நீர்கொழும்பு தடாகத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற, சுமார் எண்ணூற்று அறுபத்து நான்கு (864) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புலனாய்வு நிறுவனத்தினால், 2025 ஜனவரி 13 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு தடாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) படகுகள் அவதானித்து பரிசோதிக்கப்பட்டன. அங்கு, குறித்த டிங்கி படகுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இருபத்தி ஒன்பது (29) பைகளில் அடைக்கப்பட்ட எண்ணூற்றி அறுபத்து நான்கு (864) கிலோ எழுநூற்று ஐம்பது (750) கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பை ஒன்றில் (01) பொதிசெய்யப்பட்ட பீடியுடன் கூடிய பார்சல் ஒன்று இருந்ததுடன், கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் கரைக்கு கொண்டு வர முயன்ற பீடி,பீடி இலைகள் மூட்டை மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளும் நீர்கொழும்பு தடாகத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அனுமதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.