வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடரச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தங்கல, மகாகனதராவ மற்றும் அளுத்பாரகம பகுதிகளுக்கும், அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பகுதிக்கும் கடற்படையின் 04 நிவாரணக் குழுக்களை 2025 ஜனவரி 24 அன்று கடற்படையால் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, புத்தங்கல மற்றும் மகாகனதராவ அளுத்பாரகம பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரணக் குழுக்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட லஹுகல மஹா வாவியில் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி தற்காலிக தடைகளை அமைத்து வருகின்றனர். தற்போது, பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் 3009 பேரிற்கு கடற்படையின் படகுகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப உடனடி நிவாரணம் வழங்குவதற்காக 48 மேலதிக கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.