நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் 2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடித்த பதினேழு பேர் (17) நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255) கடலட்டைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 Mar 2025

சுமார் 78 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 மார்ச் 03) யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

03 Mar 2025

மன்னார் பிரதேசத்தில் சுமார் 12 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், மரிச்சக்கட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், முப்பத்தொரு (31) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.

03 Mar 2025