சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயன்ற சவர்க்காரங்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 மார்ச் 11 ஆம் திகதி இரவு நேரத்தில் கல்பிட்டி இப்பண்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எண்ணூற்று ஐம்பத்தைந்து (855) சவர்க்கார கட்டிகளுடன் (01) டிங்கி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் பொருட்களைக் கடத்துவதால் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி வருமான இழப்பு காரணமாக பொருளாதாரத்தில் நீண்டகால பாதகமான விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையின் விசேட கப்பல் படைப்பிரிவின் மூலம் கல்பிட்டி இப்பண்தீவு கடற்பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 2025 மார்ச் 12 ஆம் திகதி இரவு குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான (01) டிங்கியில் பயணித்துக் கொண்டிருந்த்தை அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அங்கு, குறித்த டிங்கி படகில் பிளாஸ்டிக் கொள்கலனில் நுட்பமான முறையில் பொதிச்செய்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற எண்ணூற்றி ஐம்பத்தைந்து (855) சவர்க்கார கட்டிகளுடன் (02) இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட கல்பிட்டி வன்னிமுண்தலம் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், சவர்க்கார கட்டிகள் மற்றும் டிங்கி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.