இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, 2025 ஜூன் 30 வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்யிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.