யாழ்ப்பாணத்தின் மாமுனை பகுதியில் ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2025 ஜூலை 04) அதிகாலை இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள எழுபத்தொரு (71) கிலோகிராம் நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலைக்கேணி கடற்படை நிலையத்தைச் சேர்ந்த ஒரு சிறப்புக் குழு, யாழ்ப்பாணம் மருதங்கேணி காவல்துறையுடன் இணைந்து, இன்று (2025 ஜூலை 04) அதிகாலையில் மாமுனைப் பகுதியில் மேற்கொண்ட ஒரு சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான நான்கு (04) பயண பைகளில் மற்றும் ஒரு (01) பொதியானது அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது . அங்கு, பயண பைகளில் மற்றும் பொதியில் நுணுக்க்கமான முறையில் பொதிச்செய்யப்பட்டிருந்த சுமார் எழுபத்தொரு (71) கிலோகிராம் மற்றும் நானூறு (400) கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு பதினாறு மில்லியன் (16) ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மருதங்கேணி காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.