உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 ஜூன் 20 முதல் ஜூன் 30 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு (06) டிங்கி படகுகளையும் முப்பத்தொறு (31) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையால் திருகோணமலையின் சல்லிகோவில், சல்லிதீவு, போல்டர் பாயிண்ட் மற்றும் மலைமுண்டல் ஆகிய கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியதிற்கும், மின்சார விளக்குகளைப் பயன்படுத்தியதற்கும், இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடலட்டைகளை பிடித்ததற்காகவும், 31 சந்தேக நபர்கள் 06 டிங்கிகள் மற்றும் 11 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள், மீன்கள் மற்றும் கடலட்டைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மாங்கேணி மற்றும் ஈச்சலம்பத்து மீன்பிடி மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சல்லிகோவில் பகுதியில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு, தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்கள் உப்புவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.









