நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

07 Jul 2025

புத்தளம் மற்றும் கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூன் 20 முதல் 30 வரை) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் ஒரு (01) லொரியையும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

07 Jul 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 ஜூன் 20 முதல் ஜூன் 30 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு (06) டிங்கி படகுகளையும் முப்பத்தொறு (31) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

07 Jul 2025

இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் 2025 ஜூலை 06 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டனர்.

07 Jul 2025