கடற்படையினரால் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி நீர்க்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐநூற்று எண்பத்து மூன்று (583) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகில் பதினைந்து (15) சந்தேகத்திற்கிடமான பைகளில் சட்டவிரொதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 583 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் இவ் பீடி இலைகளை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி (01) படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இலங்கை கடற்படையினரால் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளினால் பீடி இலைகளை நாட்டிற்குள் கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.