அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்துடன், தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து அனுராதபுரத்தில் உள்ள சல்காடு மைதானத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது, இரண்டு (02) சந்தேக நபர்களும் மோட்டார் வாகனமும் பதினைந்து (15) பொதிகளில் பொதிச்செய்யப்பட்ட சுமார் இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ஆறு மில்லியன் (6) ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 33 வயதுடைய பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மோட்டார் வாகனத்தை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.