காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ கடற்படையின் உதவியுடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது

காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்புக் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த மீன்பிடிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பேரில், உடனடியாக பதிலளித்த கடற்படை, இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவுடன் இணைக்கப்பட்ட தீயணைப்புக் குழுவானது, ஒரு (01) தீயணைப்பு வண்டி மற்றும் இரண்டு (02) நீர் பவுசர்களுடன் மீன்வளத் துறைமுக வளாகத்திற்கு சென்று தீயைக் கட்டுப்படுத்தியது. கடற்படை தீயணைப்புக் குழு, காலி நகர சபை தீயணைப்புப் பிரிவுடன் இணைந்து காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் மீனவ சமூகத்தின் ஆதரவுடன் ஐந்து (05) மீன்பிடிக் கப்பல்களில் பரவி வந்த தீயை வெற்றிகரமாக அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.