சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1680 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்களை நீர்க்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, நீர்கொழும்பு கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல கப்பல் நடத்திய ரோந்துப் பணியின் போது, குறிப்பிட்ட கடல் பகுதி வழியாக கடற்கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு, ஐம்பத்தாறு (56) சந்தேகத்திற்கிடமான பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களுடன் டிங்கி (01) படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கற்பிட்டி ஜனசவிபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும், சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.