நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.

26 Sep 2025