கொழும்பு வேல்ல வீதியில் 1618 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைப்பற்றப்பட்டார்

கொழும்பு வேல்ல வீதிப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு (1618) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு வேல்ல வீதி பகுதியில் பொலிஸாருடன் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, ஒரு (01) சந்தேக நபரும், அந்த கடையில் விற்பனை செய்ய தயார்நிலையில் இருந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு (1618) வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 இல் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். மேலும், சந்தேக நபரும் வெளிநாட்டு சிகரெட்டுக்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வேல்ல வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.