இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.