தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

“போதையற்ற நாடு - ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளைச் சேர்ந்த கடற்படைக் படகுகள், கப்பல்கள் மற்றும் உளவுத்துறை சேவைகளால் பல நாட்களாக தீவிர கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தெற்கு கடலில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட பைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன, மேலும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன. இந்த போதைப்பொருள் பொதிகள் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது, மேலும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய விசேட பரிசோதனையின் போது, பொதிகளில் சுமார் ஐஸ் போதைப்பொருள் 670 கிலோ 676 கிராம் மற்றும் 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் 12 கிலோ 036 கிராம் உள்ளடக்கிய (51) ஐம்பத்தொரு பொதிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் கருத்துக்களை தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொது மக்களின் பாதுகாப்புக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுருத்தலாக இருக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும், இந்த போதைப்பொருளை இல்லாமல் ஆக்குவதற்கான “முழு நாடும் ஒரே தேசிய வேலைத்திட்டத்தில்” என்ற தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.மேலும் கருத்து தெரிவித்த அவர், விசேடமாக ஜனாதிபதியின் அறிவுருத்தரலின்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் தேசிய புலனாய்வு சேவை உள்ளிட்ட அனைத்து புலனாய்வு சேவைகள், முப்படைகள், இலங்கை பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கடலோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அனைத்த்து சட்ட அமலாக்க நிருவனங்களுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தேவையான அடித்தளத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, போதைப்பொருள் கடத்தளை கட்டுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கை கடற்படை பாரிய கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கடல்வழிகளூடாக போதைபொருட்களை கொண்டு வருவதலை தடுப்பதற்காக ஏனைய சட்ட அமலாக்க நிருவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுக்களை தெரவித்தார். மேலும் போதைப்பொருளை தடுப்பதற்காக அதிகளவான பொதுமக்களின் ஒத்துழைப்பு இருப்பதாகவும், பொது மக்கள் வளங்கும் தகவல்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெருவதாக கூறிய அவர். அதற்காக அனைத்து பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

அதேபோல், தேசிய பாதுகாப்புக்காக கடமையாற்றும் அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்பினால்,தேசிய பாதுகாப்புக்கு தீமைபயக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எவ்வித சட்டவிரோத பொருள்களும் கடல்வழியாக் கொண்டுவருவதற்கு எவ்வித வாய்ப்பு இல்லை என்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக ஒன்றிணைந்து நடவடிக்கையில் ஈடூபடுவதாகவும் அங்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேலும் கருத்துக்களை தெரிவித்தார்

மேலும், இலங்கை கடற்படை ஏனைய துறைகளுடன் இணைந்து தீவின் கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் தரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட ஐஸ் 670 கிலோ 676 கிராம், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் 12 கிலோ 036 கிராம் போதைப்பொருள் தொகை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.