யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்
யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, செல்லுபடியாகும் அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களுடன் சுமார் ஆயிரத்து இருநூற்று நாற்பது (1240) கடலட்டைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியையும் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடல் மற்றும் கடலோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, 2025 அக்டோபர் 14 ஆம் திகதி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிருவனம் யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து வேலணித்துறை பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வண்டியை கண்காணித்து சோதனை செய்தனர். அங்கு, செல்லுபடியாகும் அனுமதியின்றி சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள், சுமார் ஆயிரத்து இருநூற்று நாற்பது (1240) கடலட்டைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 50 வயதுக்குட்பட்ட அல்லப்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், இரண்டு (02) சந்தேக நபர்கள், கடலட்டைகள் மற்றும் கெப் வண்டி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.