53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக நபர்களுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. பல நாள் மீன்பிடி படகு இன்று (2025 அக்டோபர் 17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், படகில் இரண்டு உறைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் 53 கிலோ 134 கிராம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இவ் போதைப்பொருள் தொகை, சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
“போதையற்ற நாடு ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து, நாட்டின் குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்தும் அந்த சமூகப் பேரழிவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான கூட்டுத் திட்டத்துடன் தீவின் கடற்கரை மற்றும் கடலோரங்களை உள்ளடக்கி போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், கடலோர காவல்படையின் உதவியுடன் இலங்கையின் தெற்கே கடல் பகுதியில் பல நாட்களாக நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, அந்தக் கடல் பகுதியில் பயணித்த ஒரு உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகு சோதனை செய்யப்பட்டது. அங்கு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) உறைகளை கண்டறிந்த பின்னர், பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஐந்து (05) சந்தேக நபர்கள் இன்று (2025 அக்டோபர் 17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட பரிசோதனையில், இரண்டு (02) உறைகளில் சுமார் 53 கிலோகிராம் 134 கிராம் ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கடற்படை, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய தீவிர கடற்படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமான போதைப்பொருள் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தொடர்ந்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக கடற்படை மற்ற தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், எனவே போதைப்பொருள் கடத்தல் அல்லது அதற்கு துணை போவதைத் தவிர்க்குமாறு மீனவ சமூகத்தை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும், இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஐந்து (05) சந்தேக நபர்கள், 53 கிலோகிராம் 134 கிராம் ஹெராயின் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.