கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட MV IYO கப்பலின் பணியாளர் ஒருவரை சிகிச்சைக்காக தரையிறக்க கடற்படையின் உதவி
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக 2025 அக்டோபர் 26 ஆம் திகதி திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு பயணித்த பெனமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான MV IYO-வில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பணியாளர் வயிற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக (Medical Evacuation- MEDEVAC) நோயாளியை கரைக்குக் கொண்டு வர கடற்படையினரிடம் உதவி கோரி, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கப்பலில் இருந்து பெறப்பட்ட அறிவிப்பை உடனடியாக ஏற்றுக்கொண்ட கடற்படை, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு கடற்படை கப்பலை மருத்துவக் குழுவுடன் கடல் பகுதிக்கு உடனடியாக அனுப்பி, ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்தது.
அதன்படி, கடற்படைக் கப்பலில் படுகாயமடைந்த பிலிப்பைன்ஸ் நோயாளியைப் பெற்ற பிறகு, அவர் உடனடியாக திருகோணமலை துறைமுகத்திற்கு அடிப்படை முதலுதவி சிகிச்சையுடன் கொண்டு வரப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளது.


